என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பழங்குடியின மக்கள்
நீங்கள் தேடியது "பழங்குடியின மக்கள்"
மாலியில் வேட்டைக்காரர்கள் நிகழ்த்திய துப்பாக்கி தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Mali #Hunter #Farmer #Conflict
பமாகோ:
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் கோலோகன் என்கிற கிராமம் உள்ளது. இங்கு புலானி எனப்படும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கால்நடை மேய்ப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர்களுக்கும், ஆயுதம் ஏந்திய வேட்டைக்காரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோலோகன் கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த வேட்டைக்காரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளினர். மேலும் அங்கிருந்த வீடுகளுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடினர்.
இந்த தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Mali #Hunter #Farmer #Conflict

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ், இலவச திருமண நிகழச்சியில் பழங்குடியின மக்களுடன் கைகோர்த்து நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. #JharkhandCMDance
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியின மக்களுக்கான பிரமாண்ட திருமண நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் 350-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்களுக்கு திருமணம் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருமணம் முடிந்ததும் விழா மேடையில் இருந்து கீழே இறங்கிய ரகுபர் தாஸ், உற்சாக மிகுதியில் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடினார். பெண்களுடன் கைகோர்த்து அவர் ஆடியதைப் பார்த்த பொதுமக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மக்களோடு மக்களாகக் கலந்து முதலமைச்சர் இவ்வாறு நடனம் ஆடியதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. #JharkhandCMDance
×

X